ஞாயிறு, 12 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
சங்கொலி
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்அணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்அணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடு

கீரனூர், கருவேப்பிலான் பகுதிகளில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு

கீரனூர், கருவேப்பிலான் பகுதிகளில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் கருவேப்பிலான் பகுதிகளில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவில் குளம், மதுபான கடைகள் அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் 29.06.2026 அன்று துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கீரனூர் பகுதி மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கருவேப்பிலான் ஆகிய பகுதிகளில் 29.06.2026 அன்று துரை வைகோ எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

முதலில், கீரனூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, பள்ளியின் தேவைகள் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு கணிதப் பாடம் கற்பிக்க ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவிகள் சிரமம் அடைவதாகவும், பள்ளிக்கு அருகில் பயன்படுத்தப்படாமல் உள்ள ஒரு இடத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தத்தலாம் என்று தெரிவித்தனர். அதனை நேரில் சென்று பார்வையிட்டபோது, அந்த இடம் முழுவதும் புதர்கள் மண்டிக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அந்த இடத்தை சுத்தம் செய்து மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்த கோவில் குளத்தை ஆய்வு செய்தார். அப்பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கடந்த 11.06.2026 அன்றே உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி நடவடிக்கை கோரியிருந்தார். அதன் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, இயற்கை வளம் பாதுகாக்கப்பட்டது.

பின்னர், கீரனூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அருகில் இருந்த ஒன்றிய ஊராட்சி தொடக்கப் பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதையும், பள்ளி வளாகத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய்கள் பள்ளியின் கூரையில் விழுவதால் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதையும் கண்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து சுமார் 300 மீட்டர் சுற்றளவிற்குள் இரண்டு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்து, மாணவிகளின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மதுபான கடைகளை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என்று உறுதியளித்தார்.

இறுதியாக, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருவேப்பிலான் பகுதியில் பொதுமக்களை சந்தித்தார். தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் (MPLADS) மூலம் புதிய நியாயவிலைக் கடை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை வைக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு, அப்பகுதி மக்களின் நீண்டநாள் தேவையை நிறைவேற்றும் வகையில் நியாயவிலைக் கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துரை வைகோ எம்.பி. உறுதியளித்தார்.

கீரனூர், கருவேப்பிலான் பகுதிகளில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு | சங்கொலி