ஞாயிறு, 12 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
சங்கொலி
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்அணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்அணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடு

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாநகராட்சி ஆணையரையும் சந்தித்து துரை வைகோ எம்.பி. கலந்துரையாடல்

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாநகராட்சி ஆணையரையும் சந்தித்து துரை வைகோ எம்.பி. கலந்துரையாடல்

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீக் தயாள் மற்றும் மாநகராட்சி ஆணையர் வீர பிரதாப் சிங் ஆகியோரை சந்தித்து, தொகுதியின் முக்கிய கோரிக்கைகளை தேதி வாரியாகத் தொகுத்து துரை வைகோ எம்.பி. விளக்கினார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. பிரதீக் தயாள், இ.ஆ.ப. அவர்களையும், திருச்சி மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள திரு. வீர பிரதாப் சிங், இ.ஆ.ப. அவர்களையும், 17.06.2026 அன்று மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து தனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோரிக்கைகள் குறித்து துரை வைகோ எம்.பி. கலந்துரையாடினார்.

அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம், ஏற்கனவே கொடுக்கப்பட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளைத் தொகுத்து, கொடுக்கப்பட்ட தேதி வாரியாக குறிப்பிட்டு ஒரு கடிதமாகவும், புதிய கோரிக்கைகளைத் தனித்தனி கடிதங்களாகவும் இருவருக்கும் தனித்தனியே சமர்ப்பித்து, அவை குறித்த அனைத்து விளக்கங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முக்கியமாக: (1) திருச்சி பன்னாட்டு விமான நிலையை ஒட்டிய விரிவாக்கத் திட்டத்திற்குத் தேவையான 7.67 ஏக்கர் நிலத்திற்கான வழிகாட்டு மதிப்பு (GLV) திட்டம் தொடர்பான தற்போதைய நிலவரத்தை வழங்கக் கோரினார்; (2) திருச்சியில் உள்ள துறைமுகம் அமைப்பதற்கான உரிய நிலத்தை மாவட்ட நிர்வாகம் மூலம் ஒத்துக்கீடு செய்து தர முதல்வரை கேட்டுக்கொண்டதையும் தெரிவித்தார்; (3) தூவாக்குடி - பாலண்ணை அணுஞ சாலை அமைக்கும் பணிகளுக்கான நில எடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான பணிகள் குறித்து — மொத்தம் 9 கிராமங்களில் இரண்டு கிராமங்களுக்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 7 கிராமங்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கி முடிப்போம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையரிடம், தனது MPLADS நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் எங்கு நிறைவு பெற்றுள்ளன என்பது தொடர்பான விவரங்களை நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம் மற்றும் நிலை முழுமையை ஆய்வு செய்து உறுதி செய்யும் வாய்ப்பை ஒருங்கிணைக்க கேட்டுக்கொண்டார். அத்துடன், திருச்சி மாநகராட்சி வார்டு எண் 59, மன்னார்புரம் ச்சீல்ஸ் சாலையில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்றக் கோரி கடிதம் கொடுத்தார்.

மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், எதிர்கால நல்வாழ்வுக்கான திட்டங்களை வகுப்பதிலும் இந்த இருவரும் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்றும், அப்பகுதியின் மக்கள் பிரதிநிதியும், அதிகாரிகளும் இணைந்து செயல்படும்போது அந்தப் பகுதி நிச்சயம் உயர்ந்து வளரும் என்றும் துரை வைகோ எம்.பி. உறுதியான நம்பிக்கை தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாநகராட்சி ஆணையரையும் சந்தித்து துரை வைகோ எம்.பி. கலந்துரையாடல் | சங்கொலி