சேலம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சகோதரர் வ.கோபால்ராசு அவர்களின் மகன் கோ.ஆதிரை - இரா.கணேஷ்பாண்டி ஆகியோரது திருமண வரவேற்பு விழா 29.06.2026 அன்று காலை 11 மணியளவில் ஆத்தூர், நரசிங்கபுரம், சிவசக்தி திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு, மணமக்கள் இணை பிரியாமல் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ துரை வைகோ எம்.பி. வாழ்த்தினார்.
கழக பொருளாளர் மு.செந்திலதிபன், துணைமைக் கழகச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மகளிரணி செயலாளர் மல்லிகா தயாளன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ந.மகேந்திரவர்மன், லிபியா ஆர்.சந்திரசேகர், கே.கே.கணேசன், சேகர், நா.முருகன், சோ.வீரக்குமாரன், மாவை மகேந்திரன், டி.டி.சி.சேரன், எஸ்.ஜெயசீலன், க.இராமநாதன், கோ.இராமதாஸ் மற்றும் என்.எஸ்.இரங்கசாமி, வழக்கறிஞர் பழனிச்சாமி, கொடுமுடி சண்முகம், பி.எஸ்.சுப்ரமணியன், பொன்சேதுபதி, கோவி அசோகன், இராமு, தங்கநெடுமாறன், சந்திரன், எம்.ஆர்.செல்வராஜ், சி.பாபு, பி.செல்வகுமார், சுப.செல்வகுமார், பி.ஜெயராமன், இராமராஜ், கு.கலைவாணன், என்.பி.வெங்கடேசன், முத்துசாமி, பி.இரவிச்சந்திரன், டி.எஸ்.சுப்ரமணி, கே.எஸ்.செல்லப்பாப்பு உட்பட மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர்.
29.06.2026 அன்று காலை சேலம் மாவட்டக் கழகச் செயலாளர் கோபால்ராசு அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு செல்லும் வழியில், பெரம்பலூர் மாவட்ட எல்லையில், துரை வைகோ அவர்களை கழகத் தோழர்கள் பட்டாடை அணிவித்து வரவேற்றனர். பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர் ஜெயசீலன், அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் இராமநாதன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் துரைராஜ், மாநில விவசாய அணி செயலாளர் வாரணவாசி இராஜேந்திரன் மற்றும் ஏராளமான கழக தோழர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கே.சிவக்குமார் அவர்களும் கலந்து கொண்டு துரை வைகோ எம்.பி. அவர்களை வரவேற்று சிறப்பித்தார்.

