திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகளாக கீழ்க்குறிப்பிட்டுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 09.07.2026 அன்று சென்னை தாயகத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவைத்தலைவர்: சு.சம்பத் — அலங்காடு, கருவம்பாளையம், திருப்பூர் மாவட்டம்.
செயலாளர்: இ.என்.கந்தசாமி பி.எஸ்.சி., பி.எல். — இளமுகில் வளாகம், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், திருப்பூர் மாவட்டம்.
பொருளாளர்: பி.திருமூர்த்தி — பாரப்பாளையம், மண்ணரை (அருகல்), ஊதுக்குளி ரோடு, திருப்பூர் மாவட்டம்.
துணைச் செயலாளர்கள்: தி.தளபதி பிரபு (எ) கோபிநாதன் — காந்தி நகர் அஞ்சல், திருப்பூர் மாவட்டம்; எல்.ஆனந்தகுமார் — இடுவம்பாளையம், திருப்பூர் மாவட்டம்; வழக்கறிஞர் சி.கனிமொழி — நாகரத்தினம் மில் வடக்கு வீதி, வேலம்பாளையம், திருப்பூர் மாவட்டம்; மு.பூபதி — தியாகி குமரன் வீதி, புதுக் காளணி, திருப்பூர் மாவட்டம்.
சம்பந்தப்பட்ட கழகத் தோழர்கள் மேற்குறிப்பிட்டவாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு கழகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தலைமைக் கழக அறிவிப்பாக — மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக அரியலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா அவர்களும், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சென்னை பெருநகர மாநகராட்சி மன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி அவர்களும், ஆடுதுறை இரா.முருகன் அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள் என வைகோ அவர்கள் 06.07.2026 அன்று அறிவித்துள்ளார்.

